வெள்ளி, 25 செப்டம்பர், 2009

இரு துருவங்கள்!




இந்த இருவரும் தத்தம் முயற்சிகளில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன்கள். ஒருவர், ’ஐ.பி.எஸ் ஆவது என் லட்சியம்” என கொள்கை கொண்டவர். இன்னொருவர் ஐ.ஏ.எஸ் ஆவது தன் லட்சியமாகக் கொண்டவர். இருவரும் தங்கள் லட்சியத்தை அடைந்துவிட்டார்கள் என்பதோடு இளைய தலைமுறையினருக்கு ரோல்மாடல்களாக திகழ்கிறார்கள். முன்னவருக்கு அறிமுகம் தேவையில்லை. என் வலைப்பதிவில் ஏற்கனவே அவரைப்பற்றி பதிவிட்டிருக்கிறேன். சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.ஏ.எஸ் ரேங்க் கிடைத்தும் தன் விருப்பமாக தேர்ந்தெடுத்தது ஐ.பி.எஸ் சர்வீஸை! பின்னவர் பற்றி சிறு அறிமுகம் உங்களுக்கு! கடையநல்லூரைச் சேர்ந்த ராஜலிங்கம் என்ற இந்த 27 வயதான துடிப்பான இளைஞர், என்.ஐ.டி திருச்சியில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். இரண்டுமுறை சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு முன்பே ஐ.பி.எஸ்ஸாக தேர்வு பெற்றவர். உத்தரபிரதேசம் மாநிலம் முராதாபாத்தில் ஏ.எஸ்.பி-யாக தன் கடமையை நேர்மையாக செய்தவர். சட்டத்தை நிலைநாட்டத் துடிக்கும் துடிப்பான காவல் பணியில் இருந்தாலும் அவருக்கு பாலிசி மேக்கராக உருவாக ஆசை. அதாவது தன் ஒற்றைக் கையெழுத்தில் ஒரு குடும்பத்தை ... ஒரு கிராமத்தை... ஒரு மாநிலத்தை வளமாக்க கனவு காண்பவர். அவரின் விடாமுயற்சியின் பலனாக இந்தமுறை ஐ.ஏ.எஸ் தேர்வாகி உள்ளார். தற்போது மசூரியில் பயிற்சியில் இருக்கும் இவர் நிறைய்ய்ய்ய்ய்ய சாதிக்க இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் ராஜலிங்கம்!

    பின்குறிப்பு: திரு.ராஜலிங்கத்தைப் பற்றி தனி பதிவு ஒன்றை விரைவில் எழுதுகிறேன். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் உண்டு :)

கருத்துகள் இல்லை: