என்.சி.சி யூனிஃபார்மில் இருக்கும் குட்டிப்பையன்னு நினைச்சிடாதீங்க... இது ஹைதராபாத் போலீஸ் அகாடமியில எடுத்தது. ஆளு இப்போ என்னவா இருக்காரு? எப்படி இருக்காரு? அடுத்த படத்தோட கேப்ஷன் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
அவர்தான் இவர்! பெயர் செந்தில்வேலன் ஐ.பி.எஸ்! 1978-க்குப் பிறகு 2004-ல் ஹைதரபாத்தில் இருக்கும் போலீஸ் அகாடமியின் சிறந்த பயிற்சி மாணவராக தேர்வு பெற்று பிரதமரின் கையால் 'பேட்டன்' என்ற கௌரவத்தின் அடையாளத்தையும், துப்பாக்கி ஒன்றையும் வாங்கிய தமிழர்.. இவர் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரும்கூட!
சார் இப்போ தஞ்சை மாவட்ட எஸ்.பியா இருக்காரு. இதற்கு முன் கமுதி, சிதம்பரத்துல ஏ.எஸ்.பியா சர்வீஸை ஆரம்பிச்சிவரு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியா வேற இருந்தவரு! A GOOD COP!
இவரிடம் எனக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்:
1. பத்திரிகைக்காரர்களிடம் நட்பு பாராட்டுகிறேன் பேர்வழி என்று மொக்கை போடுவது கிடையாது. (மனிதன் அதிகம் சிரிக்கக்கூட மாட்டார்!)
2. ஐ.ஏ.எஸ் பெறும் அளவுக்கு நல்ல ரேங்க் கிடைத்தும் போலீஸ் கனவுக்காக ஐ.பி.எஸ் சர்வீஸை தன் முதல் விருப்பமாகக் கேட்டு வாங்கியவர்!
3. பலருக்கு எம்.பி.பி.எஸ் ஒரு கனவு... பெற்றோரின் கனவை நிறைவேற்றிவிட்டு படித்து முடித்ததும் ஐ.பி.எஸ் கனவை முதல் முயற்சியிலேயே இவர் அடைந்தார்! அப்போ இவர் ரியல் அண்ட் குட் காப் தானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக