ஒரு ஞாயிற்றுக் கிழமை.. விடிந்தும் முடியாத தூக்கத்தில் நான். ஆழ்ந்த சயனத்தில் லயித்திருந்த என்னை பதறி எழ வைத்தது செல்போனில் இணை ஆசிரியர் ரா.கண்ணன் சாரின் அழைப்பு. முந்தைய தினத்தின் அலைச்சல் தந்த சோர்வால் பாதி தூக்கத்தில் அவர் சொன்னதைக் கேட்கிறேன். 'ஒரு தேவதைப் பெண்..அவளுக்கு இப்படி ஒரு குறையானு பதறிட்டேன்ட்டா. நீ டி.வில நேத்து பார்த்தியா? பேரழகி அவள்.. நேற்று மானாட மயிலாட ஷோவில் ராகவா லாரன்ஸ் அறிமுகப்படுத்தி வச்சார். நீ உடனே ராகவா லாரன்ஸைப் பிடிச்சு உடனே பேசி இந்த இஷ்யூவுக்கு அந்த பொண்ணோட பேட்டி வர்ற மாதிரி பண்ணு...அந்தப் பொண்ணு ஹைதராபாத்தாம்..அப்புறம்டா ஃபோட்டோஸ் நல்லா எடு!'
அவசர அவசரமாக ராகவா லாரன்ஸை லைனில் பிடித்து அந்தப் பெண்ணை ஹைதராபாத்திலிருந்து பறந்து வரச் செய்து சுடச் சுட எழுதிய பேட்டி இது. எல்லாப் புகழும் கண்ணன் சார் & ராகவா லாரன்ஸுக்கே!
இந்தப் பேட்டி வந்த பிறகு எக்கச்சக்க வாய்ப்புகள் வருவதாக சொல்லி அபிநயாவின் அப்பா குடும்பத்தோடு அலுவலகம் வந்து நன்றி சொல்லிவிட்டு சென்றார். குழந்தைமை மாறாத பால் சிரிப்போடு எனக்கும் அபி நன்றி சொன்னாள். அவள் பேசிய உலகின் அதி உன்னதமான அந்த மொழி இன்னும் என் காதிற்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
| ||
| ||
நெகிழ்ச்சிப் பெண் அபிநயா |
![]() |
''கடவுள் இருக்கார் சார்! இல்லைன்னா அபி மாதிரி திறமையான பசங்களைக் கடவுள் எங்கிட்டே கொண்டுவந்து சேர்த்திருப்பாரா? 'மூளையில இருக்கிற கட்டியால இந்தப் பையன் சீக்கிரமே செத்துப்போயிடுவான்!'னு டாக்டர்கள் சொன்னதைப் பொய்யாக்கி, இன்னிக்கு நான் உயிர் பிழைச்சு நிக்கிறேன். கை கால் விளங்காம வாழ்க்கையே சூன்யமாகிப்போச்சுங்கிற புள்ளியில் இருந்து விலகி, இன்னிக்கு பம்பரமா ஆடிட்டு இருக்கேன். உலகமே கை தட்டி ஆரவாரம் செய்யுது. இதெல்லாம் எதுக்காக சார்?'' நம் கண்களை ஊடுருவும் பார்வையுடன் விடை தெரியாத கேள்வியை வீசுகிறார் நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ்! ![]() சமீபத்தில் இவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்த அபிநயாதான் இந்தப் பூந்தோட்டத்தின் புது ரோஜா! அபிநயா... பார்க்கும் விழித் திரை பனித் திரையாய் உறைந்துவிடும் அளவுக்கு அழகாய் இருக்கிறார். கள்ளங்கபடமில்லாமல் வெளிப்படும் பனித்துளிச் சிரிப்பில் கபடி ஆடும் குழந்தைத்தனம் எல்லோரையும் வசீகரித்துவிடுகிறது. முத்துப் பற்கள் தெரிய சிரிப்பதிலாகட்டும், இடுப்பை ஒடித்து கைகள் வளைத்து அபிநயம் பிடிக்கும் நளினத்திலாகட்டும், மிக அழகான நேர்த்தியுடன் பார்ப்பவர் மனதில் கவிதையாய் பதிந்துவிடும் அபிநயா, 16 வயதேயான உலக அதிசயம்! ''அபி, ஹைதராபாத் பொண்ணு. பிறக்கும்போதே பேசுற, கேட்கிற திறன் இல்லாமப் பிறந்த குழந்தை. பெத்தவங்க எவ்வளவோ செலவு செஞ்சு சிகிச்சை கொடுத்தும் குணமாகலை. ஆனாலும் நாமதான் அவளுக்காக ஃபீல் பண்ணணும். தன் குறைகளைப் பெருசா நினைக்கிறதுக்குக்கூட அவளுக்கு நேரம் இல்லை. ஆடணும்னு தோணுச்சுன்னா, மணிக்கணக்கில் அப்படியே லயிச்சு ஆடுவா. தனக்கு இப்படி ஒரு குறை இருக்கிறதே தெரியாத அளவுக்குத் துடிப்பா தன்னை உருவாக்கிக் கிட்டவ. அதுக்குக் காரணம் அவங்க அப்பா அம்மா. 'குறைகளை, நிறைகளைக்கொண்டு பூரணமாக்கு!'ன்னு சொல்வாங்க. அப்படி அவளோட ஆர்வம் நடனத்தின் மீது இருப் பதைத் தெரிஞ்சு, ஊக்கப்படுத்தி இன்னிக்கு இந்த அளவுக்கு வளர்த்திருக்காங்க! ![]() ![]() ![]() மோனோலிசாவின் புன்னகையை உதட்டில் கசியவிட்டபடி பக்கத்தில் நிற்கிற அபிநயாவிடம் நாம் சைகை கலந்து பேசினோம். ''உங்கள் லட்சியம்.. கனவுகள் என்ன?'' என்று கேட்டதும் அத்தனை மலர்ச்சியாகப் பேச முயற்சிக் கிறார். ஐஸ்வர்யா ராயைப் போல மிஸ். வேர்ல்டு ஆகி... சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகி நிறைய சம்பாதிக்க வேண்டுமாம். லாரன்ஸைப் போலவே ஆதரவற்றோருக்காக பெரிய அநாதை இல்லம் அமைக்க வேண்டுமாம்! இப்படி இன்னும் இன்னும் விரிகிறது அபியின் விழிகளைப் போலவே அவர் கனவுகளும்! ''சமீபத்துல சன் டி.வியின் 'மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சியில் ஆட வெச்சேன். டான்ஸ் பின்னி எடுத்துட்டா! நிகழ்ச்சியைப் பார்த்த எல்லோரும் போன் போட்டு இவளைப் பத்தி விசாரிச்சாங்க. எனக்கிருந்த கொஞ்சநஞ்ச கர்வத்தையும் அன்னிக்குத் தூள்தூளாக்கி அசறடிச்சிட்டா. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த காவேரி கலாநிதி மாறன் மேடம் உடனே அபியை வரவழைச்சு இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள 'ஹியரிங் எய்டு மெஷின்' கொடுத்து அவளைப் பாராட்டினாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்!'' என்றவர் சின்ன இடைவெளிவிட்டு, ![]() | |||
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக