திங்கள், 27 ஏப்ரல், 2009
ஓட்டுப் பொறுக்கிகளை செருப்பால் அடியுங்கள்!
மனதை ரணமாக்கும் படங்கள் இவை. தயவு செய்து இளகிய இதயம் படைத்தோர்களும் இதய நோயாளிகளும் இந்தப் பதிவை தொடர வேண்டாம். நான் பதிவிட்டதற்குக் காரணம் இப்படியும்கூட ஒரு இனம் அழிக்கப்படுமா? என்ற கேள்வியை மொழி தெரியாத ப்ளாக்கர் எவனும் பார்த்தால் பதறிப்போவான்! அவன் மனதிலும் ஈரம் துளிர்க்கும் என்பதற்காகத்தான்!
சிங்கள பேரினவாத டிராகுலாக்களும், 'தமிழன் தமிழன்' என்று மேடையில் முழங்கி வீதிக்கு ஒரு மனைவி வைத்து முற்போக்கு சிந்தனை கொண்டவனாய் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு ஈரேழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்த கேடுகெட்ட ஜென்மங்கள்.. இப்போது ஓட்டுப் பொறுக்கிகளாய் நம் முன் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கும் அரசியல் பேடிகள்.. இருவரும் ஒண்ணுதான் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள்!
மண்ணின் மைந்தர்கள் மண்ணோடு மண்ணாக போனதன் பின்னணியில் இருப்பது நம் ரத்தம் குடித்த அரசியல் அட்டைகள்தானே? எதிரிகளை மன்னிக்கலாம். தமிழின துரோகிகளை மன்னிக்கவே கூடாது. கொழுத்துப் போன.. புழுத்துப்போன இந்த சாக்கடைப் புழுக்களை ஓட்டெணும் ஆயுதம் கொண்டு ஓடஓட விரட்டுவோம்!ஓட்டரசியல் கேலிக்கூத்தானபோது அது ஒன்றுதானே குறைந்தபட்ச நிம்மதி நமக்கு. ஆனால் தேர்தல் கமிஷன் ஓட்டு போட விரும்பாதவர்களுக்கும் சேர்த்து பிரத்யேகமாக 'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்ற பொத்தனை அழுத்தும் வாய்ப்பு சட்டமன்ற தேர்தலுக்குள்ளாவது கிட்டும் என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்!
அதுவரை...
தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் பற்றுக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்..! ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக