சனி, 6 ஜனவரி, 2007
காசி ஆனந்தனுக்கு வந்தனம்!
என் கல்லூரி நாட்களில் என் மனதில் அதிகம் பதிந்தது தோழர் காசி ஆனந்தனின் நறுக்குகள் தான். 'கலைக்குயில் தமிழ்ப் பேரவை" என்ற அமைப்பை நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும்போது ஆரம்பித்தேன். அப்போது கலைக்குயிலுக்கு நல்ல மந்திர வார்த்தை தேவைப்பட்டது. சட்டென மனதில் உதித்தது..'இருப்பாய் தமிழா..நெருப்பாய்!' என்ற வரிகள்தான்! அவருடைய கவிதைகளில் ஒன்று எனக்கு ரொம்பவே பிடிக்கும்..ஆனாலும் அந்தக் கவிதையில் அவர் கூறியதைப் போல என்னால் முழுமையாக வேற்றுமொழி கலக்காமல் வாழமுடியவில்லை..காசி ஆனந்தன் என்னை மன்னிப்பாராக!
எழுவாய் நீ நெருப்பாய்!
தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!
தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!
உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!
பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!
இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!
வசையாரும் பாடினால்....
வரலாற்றை விளக்கு!
மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!
உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!
தமிழ்வாழ உழைப்போhர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழை யார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக