சனி, 19 மே, 2007
எனக்கு பிடிச்ச கதாநாயகர்கள்!
பொண்ணுங்க மட்டும்தான் ராபர்ட் டி நீரோ, மெல் கிப்ஸன், ஓவன் வில்சன், ரசல் க்ரோவ்னு பீட்டர் விடுவாங்களா..எங்களுக்கும் விடத் தெரியும்டே! எனக்கு பிடிச்ச அசலூரு நாயகர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. எதிர்காலத்துல ஹாலிவுட் படம் பண்ணினேன்னா இவங்க ரெண்டு பேரையும் மைண்ட்ல வச்சுப்பேன். சிரிக்காதீங்க சின்னப் பய மக்களே!
'ஜானி டெப்'புன்னு ஒரு ஹீரோ இருக்காரு உங்களுக்குத் தெரியுமா? பைரேட்ஸ் ஆப் கரீபியன் வகையறா படங்கள்ல குடுகுடுப்பைக்காரன் மாதிரி ஒரு காஸ்ட்யூம்ல வந்து கலக்குவாரே.. அவரோட ரசிகன் நான்!
Pirates of the Caribbean: The Curse of the Black Pearl (2003), Pirates of the Caribbean: Dead Man's Chest(2006 ), Pirates of the Caribbean: At World's End (2007) கண்ணுக்கு மையெல்லாம் போட்டுக்குட்டு வந்து அசத்துவாரே..அவரேதான். அந்தாளோட முகத்துல குறும்பு கொப்பளிக்கும் பாருங்க...அடடா அமர்க்களம். படத்தோட மூணாவது பாகம் இப்ப வரப்போகுது. கல்லறைத்தீவுன்னு இதுக்கும் பேரு வச்சு நம்மாளுங்க பீதியைக் கிளப்புறாங்க..பார்த்திட்டு சொல்லுங்க.
அப்புறம் நம்ம ஹீரோ 'டாம் ஹாங்ஸ்' தான். 'காஸ்ட் அவே'னு ஒரு படம். முழுக்க முழுக்க ஒரு தீவுல மாட்டிக்கிட்ட ஹீரோவைப் பத்தின கதை! டயலாக்கே இல்லாம அவன் படுற அவஸ்தைகள், முயற்சிகள், தோல்விகள், கடைசியில் வெற்றி..அப்புறம் அவன் பெறும் தன்னம்பிக்கைனு வலிகள் நிறைந்த கதை! பார்த்துப்புட்டு சொல்லுங்க மக்கா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
யோவ், அண்ணாச்சி தெக்கத்தி, தெக்கத்தின்னு சொன்னா போதுமாவே, ஊரு பேரு என்னன்னு சொல்லிபுடும்வே. அப்புறம் விகடனில் வேலைன்னுகிட்டு, குமுதத்துக்கு ஹைபர் லிங்க் வெச்சுருக்கிறே உம்ம என்னய்யா பண்றது.
நண்பர் செல்வேந்திரன் அவர்களே.. குமுதத்துக்கும் என்று திருத்திக் கொள்ளும்! உம்ம கருத்துக்கு மதிப்பளித்து அதை எடுத்துவிட்டேன்..இப்ப சந்தோஷம் தானே ஓய்!
கருத்துரையிடுக