சனி, 25 நவம்பர், 2006

ஒரு கவிதை..



வணக்கம்! சமீபத்தில் 'புன்னகை' என்னும் சிற்றிதழ் ஒன்றை வாசிக்கும் சூழல் எனக்கு நேர்ந்தது. அதில் இடம்பெற்றிருந்த கவிதை ஒன்று நன்றாக இருந்தது. அந்தக் கவிதைக்கு தலைப்பு எதுவும் வைக்கவில்லை கவிஞர். எழுதியவர் பெயர் இரா.பூபாலன் என்று நினைக்கிறேன். இதோ உங்கள் பார்வைக்கு அதை வைக்கிறேன்.


பிட்டத்தில் விழும்

சவுக்கடியை

சகித்துக் கொள்வீர்களா?

நீங்கள்..


யாரோ விரட்ட

வாயில் நுரை தள்ளும்படி

ஓடவேண்டிய கட்டாயம்

வந்ததுண்டா உங்களுக்கு?


தார்க்குச்சியால்

குத்தினால்..?


வலிக்க வலிக்க

வாலைக் கடித்து

விரட்டினாலும்

பொறுத்துக் கொண்டு

சுமப்பீர்களா?


பிறகெதற்கு

அடிக்கடி

சொல்லிக் கொள்கிறீர்கள்..?


மாடு போல

உழைக்கிறேன் என்று..?

2 கருத்துகள்:

பாரதி தம்பி சொன்னது…

நல்ல கவிதை..தேடிப்பிடித்து பதிவிட்டதிற்கு நன்றிகள்.என் பங்குக்கு அதே கோயம்புத்தூரகாரர் நா.முத்துவின் கவிதையொன்றை சொல்லிவிடுகிறேன்.
//தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்ட வக்கில்லை..
தாயோலி..
செங்கல்லைத்
தூக்கிட்டுப்போறான்
கோயில்கட்ட..//

பாரதி தம்பி சொன்னது…

நல்ல கவிதை..தேடிப்பிடித்து பதிவிட்டதிற்கு நன்றிகள்.என் பங்குக்கு அதே கோயம்புத்தூரகாரர் நா.முத்துவின் கவிதையொன்றை சொல்லிவிடுகிறேன்.
//தங்கச்சி குளிக்க
தடுக்கு கட்ட வக்கில்லை..
தாயோலி..
செங்கல்லைத்
தூக்கிட்டுப்போறான்
கோயில்கட்ட