சுதந்திரம் வாங்கி 60 வருஷம் ஆச்சு..ஆனா அந்த 60-வது வருஷக் கொண்டாட்டம் முடிஞ்ச மறுநாள் நடந்த சேதி தெரியுமா? 2 மனித உயிர்கள் மலக்குழியில விழுந்து பலியான சோகம்தான் அது! அப்படி அந்த ரெண்டு ஜீவங்க பலியான விஷயம் வெளியே தெரியாம போனதில பெருசா ஆச்சர்யமெல்லாம் இல்லை. ஆகஸ்ட் 16-ம் தேதி அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில சேரின்னு ஒரு ஊரு இருக்கு (ஊருக்கு என்னமா பொருத்தமா பேரு வச்சிருக்காங்க பாருங்க!) அந்த ஊரைச்சேர்ந்தவங்கதான் மதுரைவீரன், அழகர், மகாலிங்கம், துரை. இவங்க அத்தனை பேருமே சக்கிலியருங்கன்னு சொல்லப்படுற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில இருக்குற சுக்குலி நத்தம்கிற கிராமத்தில இருக்குற பதமநாபன் ரெட்டியாரு வீட்டுக்கு செப்டிக் டேங்க் சுத்தப்படுத்துற வேலைக்குப் போனாங்க இந்த சேரிக்காரங்க. இதுல என்ன கொடுமைன்னா கடந்த 35 வருஷமா ரெட்டியாரோட வீட்டு செப்டிக் டேங்க்கை சுத்தப்படுத்துனதே இல்லையாம். ரெட்டியாரும் தன்னோட பவரை யூஸ் பண்ணி அருப்புக்கோட்டை நகராட்சி துப்பரவுப் பணியாளர்களை கூட்டிட்டு வந்து சுத்தப்படுத்தச் சொன்னாரு. அவங்க பார்த்திட்டு மிரண்டுபோய் 'அடேங்கப்பா நிச்சயம் உள்ளே விஷ வாயுஇருககும்..நாங்க மாட்டோம்பா!"ன்னு எஸ்கேப் ஆகிட்டாங்க. வறுமையின் காரணமா தற்காலிக பணியாளர்களா இருக்குற இவங்களைக் கூப்பிட்டதும் வேலை கெடைச்ச சந்தோஷத்திலே போயிருக்காங்க.செப்டிக் டேங்க்குக்கு உள்ளே முதல் ஆளா மதுரைவீரன் இறங்கி இருக்காரு..மேல்மட்டத்தில தண்ணீரா திரண்டிருந்த மலத்தை வாளியால அள்ளினவர் உள்ளுக்குள்ள இறங்கி இருக்காரு..கழுத்துவரை மலம் சூழ்ந்திருக்க வாளியாலும் கால்களாலும் கலக்க ஆரம்பிச்சிருக்காரு. 5 வாளிகளை அள்ளுன பிறகுதான் 35 வருஷங்களா தேங்கி நின்ன மலம் கூடுதலா நாற்றம் எடுக்க ஆரம்பிச்சிருக்கு. விஷ வாயு மேலே கிளப்பிப் பரவ.. மதுரைவீரன் மூர்ச்சையாகி மயக்கமாகிட்டாரு.. உடனே அழகரும், மகாலிங்கமும் மதுரைவீரனைக் காப்பாத்துறதுக்காக மலக்குழியில குதிச்சிருக்காங்கா. உள்ளே இருந்த மதுரைவீரனை, மகாலிங்கம்- அழகரும் தூக்கி விட்ருக்காங்க. துரை மேலே இருந்துக்கிட்டு உதவி செஞ்சிருக்காரு. அழகர் டேங்குக்குள்ளே மூழ்கறதைப் பார்த்த மகாலிங்கம் அவரைக் காப்பாத்துறதுக்காக திரும்பவும் செப்டிக் டேங்குக்குள்ள குதிச்சிருக்காரு... இப்போ இரண்டு பேரையுமே விஷவாயு தாக்கி இருக்கு. மூர்ச்சையாகி டேங்குக்குள்ள மூழ்கிட்டாங்க. அப்புறமா ஊர்க்காரங்க உதவியோட அவங்க எல்லோரையும் மீட்டாங்க. எல்லோரையும் அருப்புக்கோட்டை ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க.மதுரைவீரனின் உடம்பு மோசமானவுடன் மதுரை அரசு மருத்துவமனையில சேர்த்தாங்க. ஒருவாரத்துக்கு அப்புறம் ரெண்டு உசிரும் போயிருச்சு. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிச் சுமக்கும் அவலம் தீரும் நாள் எப்போ வரும்? எது எதற்கோ எந்திரங்களைக் கண்டுபிடிக்கும் மனுஷன் இந்த அவலத்துக்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்க மாட்டானா? ப்ளீஸ் யாராச்சும் சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா!
தெக்கத்திப்பையன்.
தெக்கத்திப்பையன்.
1 கருத்து:
Greetings, I came to visit Turkiyeden. Where are you? I found your site interested me was that people died why? let me know if you.
கருத்துரையிடுக