புதன், 1 நவம்பர், 2006

கோக்குமாக்கு ரிப்போர்ட்டர்!


‘'பத்திரிகைக்காரனுங்களுக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா?"

இந்தக் கேள்வியை சமீபத்தில் ஒரு பழ வியாபாரி சொல்லக் கேட்டேன். காரணம் அவர் கையிலிருந்த ஒரு மாலை நாளிதழும் அதில் வெளியாகியிருந்த கோரமான படங்களும் தான். (17 உயிர்களை காவு வாங்க காரணமாக இருந்தது யார்? 17 பேர் ஆட்டு மந்தை கணக்கா உட்கார்ந்து போனது யார் குத்தம்? அனுமதி தந்த அதிகாரிங்க குத்தமா? காசுக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட ஓனர்-கம்-டிரைவர் மஸ்தானின் குத்தமா? ஏற்கனவே 2 விபத்துக்கள் நடந்திருந்தும் லெவல் கிராஸிங்கை கண்டுக்காம விட்ட ரயில்வேயின் குத்தமா?- அதையெல்லாம் ஆராய்ச்சி செஞ்சா தனி பதிவே போடலாம்)
சமீபத்துல காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற புதுப்பாக்கம் ஆளில்லாத லெவல் க்ராஸிங்கைக் கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மேல மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளானது. உண்மையிலேயே ஆட்டோதான் ரயில் மேல போய் மோதுனுச்சுன்னு சொல்லணும்..எப்பவுமே நம்ம ஊடகங்கள் தப்பாவே எழுதி தப்பாவே விஷயத்தை கன்வே பண்ணுதுங்க. மிகமிக கோரமான அந்த விபத்துல 17 உசுருங்க பலியானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே பதைபதைக்க வச்சுது.
விபத்துக் காட்சிகளை சன் நியூஸ் சேனல் அடிக்கடி zoom பண்ணி டார்ச்சர் பண்ணியது ஒருபக்கமுன்னா பேப்பர்ல பெரிய சைஸ்ல மொக்கை மொக்கையா க்ளோஸப்ல ரத்தம் தோய்ஞ்ச படங்களை சில பத்திரிகைங்க எல்லா பக்கமும் வாரி எறைச்சு இருந்துச்சுங்க. க்ளோஸப்ல பார்த்தவங்க பதறிட்டாங்க. துண்டாகிக் கிடக்குற மனுஷ உடல் உறுப்புங்க, ரத்தம் சிதறிக்கிடக்குற தண்டவாளப் பாதைன்னு பத்திரிகைகள்ல வெளிவந்திருக்குற படங்கள் இதயபலவீனம் உள்ளவங்க பார்த்தா பரலோகத்துக்கு பாஸ்போர்ட் சர்வ நிச்சயம்! போதாக்குறைக்கு தலைப்புகள்லயும் நம்மாளுங்க பயமுறுத்திட்டாங்க. சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லுறேன்.
‘கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து வானில் சிதறி பறந்தது சிசு..’ன்னெல்லாம் எழுதி இருக்காங்க. ஆக்ஸிடன்ட்டை நேரில் பார்த்தது மாதிரியே அந்த பத்திரிகை பாக்ஸ் போட்டிருந்துச்சு..
‘என்ன கொடுமைடா சாமி’ என்று நொந்துக்கிட்டேன். எனக்கு பரிச்சயமான நாளிதழ் நண்பர்கிட்ட கேட்டேன். அவரு ரிப்போர்ட்டர் கம் புகைப்படக்காரரா வயித்தக் கழுவுறவரு.
‘‘நாய் வேஷம் போட்டா குலைச்சுத்தானே ஆகணும் boss! ‘அவனைப் பாரு ரொம்ப பக்கத்தில zoom பண்ணி ஃபோட்டோ எடுத்திருக்கான். நீயும்தான் எடுத்திருக்கியே’ன்னு பொறுப்பாசிரியர் பொரிச்செடுக்கிறாரு..அதனாலதான் இப்படி படமெடுக்குறோம்..பின்ன எங்களுக்கென்ன வேண்டுதலா?''ன்னு சொன்னாரு.
இன்னொருத்தர்,'' இப்படி எதுனாச்சும் இட்டுக் கட்டி எழுதினாத்தான் காட்சியை விசுவலைஸ் பண்ண முடியும்னு கொடைச்சல் கொடுக்கிறாருப்பா அவரு’’ன்னார். எனக்கு பொளேர்னு பொடனியில அடிச்ச மாதிரி இருந்துச்சு.
‘இதுக்கே அசந்தா எப்படி..இன்னும் இருக்கே’ன்னு இன்னொரு நண்பர் சொன்ன திருவாளர் தி ரிப்போர்ட்டர் ஒருத்தரைப் பத்தின விஷயம் பத்திரிகை வேலையை ஏதோ சாராயம் காய்ச்சுவதைப் போல ஒரு சிலபேரு செய்யுறதை என்னால உணரமுடிஞ்சது. பத்திரிகை நண்பர் சொன்ன தகவலைக் கேளுங்க.
தமிழ்நாட்டோட முக்கியமான கடற்கரை ஊராம் அது. அங்கே ஒரு வயசான நிருபர் இருக்காரு. தாத்தா பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து பரம்பரை பரம்பரையா நிருபர் ‘தொழில்’ செஞ்ச குடும்பம் அவங்களோடதாம். சின்ன ஊருல டெய்லி ரிப்போர்ட்டரா இருக்குறவருக்கு முழுநேரமும் போதையில மிதக்குறதுதான் ஜாப்பாம். பார்ட் டைம்மா பத்திரிகைக்கு எதுனாச்சும் (அரைமயக்கத்துல) எழுதி அனுப்புவாராம். கவர் வாங்குறது, ஊருக்குள்ள குட்டி தாதாவாட்டம் நாட்டாமை பண்ணுறதுன்னு ஜெகஜ்ஜால கில்லாடியா அந்த ஏரியாவையே பிதுக்கி எடுத்துருக்காரு நம்ம பில்பி.
கையூட்டு போலீஸ் ஏட்டு கணக்கா மார்க்கெட்டுல ஓசியில பொருட்களை வாரிக்குறதுன்னா அம்புட்டு பிரியம் நம்ம ஆளுக்கு! ஆனா மனுஷன் எதையாவது எழுதி அனுப்பிக்கிட்டே இருப்பாரு..அவங்க பத்திரிகையிலயும் நிறைய இடமிருக்கிறது போல (‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சிலை திறப்பு விழாவில் மலேசியா வாசுதேவன் பேசுவாருல்ல..வீரசிவாஜிக்கு தஞ்சாவூரிலும் சிலை வைக்கலாம், அங்கு நிறைய இடமிருக்கிறது..’ன்னு சொல்வார். அது ஞாபகம் வருது) கண்டது கழியதுகளையும் பிரசுரிச்சு அவங்க விசுவாசத்தை இவர்கிட்ட காட்டுச்சு சம்மந்தப்பட்ட பத்திரிகை. காரணம் விளம்பரம் புடிச்சுக் கொடுக்குறதில நம்மாளு பயங்கர கில்லாடிக்கா ஜானாம்!
யானைக்கும் அடி சருக்கும்னு சும்மாவா சொன்னாங்க. ஒருதடவை அவருக்கு நியூஸ் பஞ்சம் தலைவிரிச்சு டான்ஸ் ஆடுச்சாம். அவங்க ஆபிஸ்ல இருந்து போன் மேல போன். மனுஷர் ஆடிக்குப் போன புதுப்பொண்ணாட்டம் வாடிப் போயிட்டாராம். அவருக்குள்ள அடிக்கடி முளைக்கிற கொம்பு முளைக்க.. டூப்ளிக்கேட்டா ஒரு நியூஸை எழுதி அனுப்பினாராம். அதாவது அந்த ஊரில் முந்தைய நாள் இரவில் பனை மர உயரத்துக்கு கடல் அலையடித்ததாகவும் அதனால் மீனவர்கள் பீதியில் இருப்பதாகவும் புயல் எச்சரிக்கை நியூசை போதையேறிய தலையோட எழுதி அனுப்ப,மாப்ளையோட குரங்கு புத்தி தெரியாம பெருசா ஸ்கூப் நியூஸ் கனக்கா போட்டு நரகத்துல வறுபடக்கூடிய தகுதியை உண்டு பண்ணிக்கிட்டாராம் எடிட்டர்! நல்ல கூத்து அது.. நல்லவேளை ரொம்ப லேட்டா கண்டுபிடிச்சு எடிட்டர் வார்ன் பண்ண கதையும் அப்புறமா நடந்துச்சாம்.
அதுக்கப்புறம் நம்மாளு கூடாரத்தை மாத்திக்கிட்டாராம்.. வேற பத்திரிகையில இன்னமும் தன்னோட வீரதீர பிரதாபங்களை தொடர்ந்து அரங்கேற்றிக்கிட்டுத்தான் செல்வாக்கா ஜெகஜோதியா இருக்காராம்! திருவாளர் ‘தி ரிப்போர்ட்டர்’.
இதெல்லாம் கேட்கிறப்ப மனசு கிடந்து அடிச்சுக்குது. பத்திரிகைங்கிறது தோசையை புரட்டிப் போடுவது போல பூமியைப் புரட்டிப் போடும் ஒரு கருவின்னு நினைச்ச நினைப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா போயிடுச்சு. இதெல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒருத்தரைப் பத்தி கேள்விப்பட்டு மனசே வெறுத்துப் போயிடுச்சு. தமிழ்நாட்டின் பிரபல புலனாய்வு பத்திரிகை ஒன்றின் நிருபர் ஒருத்தர் தன்னோட பத்திரிகை பலத்தை பயன்படுத்தி பொண்ணுங்க வாழ்க்கையில விளையாண்ட கூத்தாம் அது! இதையும் பத்திரிகை நண்பர் ஒருத்தர் விலாவறியா சொன்னப்ப..தலை கிறுகிறுத்துப் போச்சு!
ம்...(பெருமூச்சுதான்!)
மனசு வெறுத்துப் போய் சினிமாவுக்குப் போகலாம்னா அங்கே தலைமகன் சரத்குமார் எவரெஸ்ட் பத்திரிகையின் க்ரைம் ரிப்போர்ட்டராய தீயசக்திகளுக்கு எதிராக பின்னி பெடலெடுக்கிறார். போலீஸே உதவி கேட்டு அவர்கிட்ட நிக்குது. மக்கள் பிரச்னைக்காக உயிரை துச்சமாக மதிச்சு போராடுறார் சரத். (படம் மோசமான தெலுங்கு சினிமாங்கிறது வேற விஷயம்)
நிஜத்திலும் அப்படி பத்திரிகைக்காரங்க இருந்தா எம்புட்டு நல்லாயிருக்கும்?
தெக்கத்திப் பையன்........

கருத்துகள் இல்லை: