செவ்வாய், 31 அக்டோபர், 2006

ஒச்சப்பன் ஒசந்தப்பன்!

சமீபத்தில் ஒச்சப்பன்கிற மேல்நாட்டுக்காரரு எடுத்த புகைப்படங்களை நெட்டில் பார்த்தேன். மெய் மறந்தேன்..அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன ஒச்சப்பன்? ஃபாரின்காரருதான் இந்தியாவை சுத்திப் பார்க்க வந்து தமிழ்நாட்டோட அழகுல சொக்கிப் போயி 2004, 2005, 2006ன்னு மூணு வருஷமா மூலை முடுக்கெல்லாம் ஊர் ஊரா சுற்றி நம்மாளுங்களை தேடிப் பிடிச்சு படம் புடிச்சாரு. அவர் நம்ம ஊரு அழகுல சொக்குனது மட்டுமில்லாம நம்ம ஊரு ரிக்ஷாக்காரர் பேரையே(ஒச்சப்பன்தானுங்க!)தன் பெயரா மாத்தி வச்சிக்கிட்டாராம். பாருங்க..நம்ம ஆளுங்களோட மதிப்பு வெளிநாட்டுக்காரனுக்கு தெரிஞ்சு இருக்கு. நம்மளுக்கு வெளங்கல. படங்களும் அம்புட்டு அம்சமா இருக்குது..இது போல நல்ல படங்கள் இருந்தால் சொல்லுங்களேன்..அப்புறம் பார்த்துங்கோ..மகராசன் காப்பிரைட் சட்டத்தில புடிச்சுப்போட அநேக வாய்ப்புகள் உண்டு. வேறெதுக்கும் யூஸ் பண்ணி வாங்கி கட்டிக்காதீங்க...
பெரிய வடிவில் பார்க்க படத்தில் சொடுக்கவும்!




























-

1 கருத்து:

சேதுக்கரசி சொன்னது…

கிராமத்துப் படங்கள் பலவும் நன்றாக இருக்கின்றன. எத்தனையெத்தனை முகபாவங்கள்!