கேக்குறவன் கேணக்கூவா இருந்தா முணாகூணாகூட நடுவீட்டுல முக்கிட்டு போவானாம்! சன் டி.வி, நக்கீரன் போன்ற மட்டமான ஊடகங்கள்(?) கடந்த சில நாட்களாக அரங்கேற்றிவரும் அருவருப்பான வியாபார தந்திரங்களை இப்போது உலகம் முழுதும் தமிழன் நன்கு தெரிந்து கொண்டிருப்பான். நாலு சுவருக்குள் நடந்த விஷயத்தை படம் வரைந்து பாகம் குறித்த இவர்கள் எந்தவிதத்தில் யோக்கியமானவர்கள்? ஓ.சியில் கிடைத்த வீடியோவை வெறும் காசு ஒன்றையே குறிவைத்து ஏதோ தேசவிரோத செயலைப்போல நடக்கக்கூடாத ஒரு விஷயத்தை கண்டுபிடித்ததாக பீற்றிக் கொள்ளும் இவர்களின் செக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்டால் தமிழனுக்கு என்ன நன்மை? அண்ணாமலை பல்கலைக் கழக பீகார் மாணவர்களின் மரணசெய்தியையும் பெட்ரோல் விலையேற்ற செய்தியையும் மழு்ங்கடிக்க பேரன் தாத்தாவுக்காக போட்ட பிட்டுக்காட்சி சூப்பரோ சூப்பர் என்று சொல்லலாமா? ஆளுங்கட்சிக்கு அடிவருடும் நக்கீரனுக்கு இது ஈழப்போருக்கு அப்புறம் செம சர்க்குலேஷன் மேட்டர் என்றும் சொல்லலாம்தானே? சன் டி.வியையும் நக்கீரனையும் திட்டி பதிவர்கள் பத்தாயிரம் பதிவுகளை தாண்டிவிட்டதுதான் மிச்சம்.மனமொத்து இருவர் உடலுறவு கொள்வது தேசதுரோகம் என்றால் ஹிட்டன் கேமராக்களை அதிகார வர்க்கத்தினரின் எல்லா இடங்களிலும் வைக்கலாம். அவ்வளவு ஏன் உங்கள் அலுவலகங்களிலும் வைக்கலாம். அங்கே நிறைய்ய்ய இடம் இருக்கிறது. உங்கள் போனை டேப் பண்ணலாம்.. எஸ்.எம்.எஸ்களை எல்லோரும் படித்துப்பார்க்கும் வண்ணம் படையல் வைக்கலாம். இன்னும் கிளுகிளுப்பாக இருக்கும். உங்களில் சுயமைதுனம் செய்யாமலே வாழ்பவன் ் எவனாகிலும் ஹிட்டன் கேமராக்களில் தப்பிப் பிழைக்கலாம். இவன்போன்ற சாமியார்களை வளர்த்துவிட்டதும் நீங்கள்தான்.. காமவயப்பட்டு அவன் செய்த அந்தரங்க பலஹீனத்தை அம்பலம்படுத்துவதும் நீங்களேதான். மக்களை கேணக்கூவாக மாற்றியது நித்யானந்தன் இல்லை..உங்களைப்போன்ற மட்டமான ஊடகங்கள்தான். குமுதம் என்றொரு பத்திரிகையின் நிலைமை படுகேவலம். கடையில் தொங்கும் சுறா விஜய் புத்தகத்தில்கூட ஜீவன் முக்தி பற்றி ஊருக்கு உபதேசம் செய்த காவி கம்மணாட்டியின் பீயை சந்தனமாய் தடவித் தந்திருக்கிறார்கள். இன்னொருபக்கம் நித்யானந்தாவின் காமலீலைகள் என்று வீடியோ காட்சிகளை அவர்களின் இணையதளத்தில் ஓடவிட்டு காசுபார்க்க வெட்கம்கெட்டு அலைகிறார்கள். குமுதம் குழுமத்தின் ஓனர் குடும்பமே காலில் விழுந்து வணங்கிய நாட்கள்தான் நிழலாடுகிறது. (32 வயது நாதாரியின் காலில் 80 வயது ஆச்சி விழுந்து வணங்கிய சம்பவத்தை அவர்கள் இப்போது எப்படி எடுத்துக் கொள்வார்கள்) எங்கோ கிடந்த காய்ந்துபோன மலத்தில் விக்கிரகம் செய்து பூஜித்து அழகுபார்த்து உன் குடும்ப பக்தியை காட்டிக் கொள்.. பரவாயில்லை..அதை வாராவாரம் வாசகர்கள் வாயில் அள்ளிவைப்பதில் என்ன நியாயம் இருந்தது? இப்போது எல்லாமே தலைகீழாய் போனபிறகு அந்த வீடியோவை கடைச்சரக்காக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நேற்றுவரை கார்ப்பரேட் கடவுளாக கொண்டாடிய உனக்கு அவனை விமர்சனம் செய்ய என்னதகுதி இருக்கிறது? மூடிக்கொண்டு இருக்கவேண்டிய நீ புலனாய்வு ரிப்போர்ட் செய்யலமா? இன்னும் இன்னும் பல பக்கி வாசுதேவ்களை வளர்த்து விடாமல் இருப்பதுதான் நீ தமிழனுக்கு உன் பத்திரிகை வாயிலாக செய்யும் முதலும் கடைசியுமான நன்மையாக இருக்கும். முதலில் உன் பின்புறத்தை நன்கு கழுவு. அப்புறம் நித்யானந்தா, ரஞ்சிதா மேட்டரை கவர் ஸ்டோரியாக்கு!
காமத்தைக் கொண்டாடிய நாட்டில் ஒரு தனிமனிதனின் அந்தரங்கம் இன்று காசாக்கப்படுவதை என்னவென்று சொல்ல?
5 கருத்துகள்:
நீங்கள் சொல்வது தான் உண்மை. எல்லோரும் சாமியாரையும் நடிகையையும் குறை சொல்லி காறி துப்பும்போது நீங்கள் மட்டும் இந்த இழிவு நிலை தமிழுக்கும் தமிழகத்துக்கும் ஏற்பட காரணமானவர்களை விமர்சித்தது ஆய்வுப்பூர்வமாக இருந்தது. கூட்டத்தில் காம லீலைகளை எழுதி ,சொந்தம் தாயை பற்றிக்கூட கேவலமாக எழுதுவதில் பேரின்பம் கொண்ட சாரு நிவேதித என்ற மஞ்சள் எழுத்தாளனை நீங்கள் சொல்லாமல் விட்டது சரியில்லை. தன்னோட இணைய தளம் வழியா எத்தனையோ பேர்க்கு வார்த்ததைகளால் காம இச்சை பூர்த்தி தொண்டு செய்து வரும் அவரின் ஆஸ்தான குரு தான் நித்ய என்பது உங்களுக்கு தெரியாதோ. ஒரு முழுமையான போர்னோ படக்காட்சியை முழு நேரமும் காண்பித்து தொலைகாட்சி அலைவரிசைகளின் உலகிலேயே முதன் முறையாக சாமியாரின் போக காட்சிகளை அரசின் மூக்கின் கீழே ஆற அமர உட்க்கார்ந்து வெளியிட்டு தமிழ் மக்களின் பேராதரவை திரட்டிய மாபெரும் சன் குழும சானல் படைத்தது சரித்திரம் தான். இதை எதிர்க்க யாரும் இல்லை. இருபத்தி நாலு மணிநேரமும் ஓடிக்கொண்டிருந்த போதே அரசுக்கு மட்டும் தெரியாமல் போனதும் சரித்திரம். சாமியாரின் லீலைகள் என்பதால் அதற்க்கு போர்னோ அந்தஸ்து வராது என்ற உண்மையை தணிக்கை குழுக்களுக்கு உணர்த்தியதும் சரித்திரம் தான். மக்களுக்கு செய்த இந்த பெரும் சேவையால் இவர்களுக்கு புலிட்சர் பரிசு கிடைக்க பரிந்துரைக்க அரசு முன்வர வேண்டும்.
காதலில் திளைத்த இரு உடல்களின் முக்திக்கான தேடல்களை, இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளியே கொண்டு வந்த இந்த ஊடகங்களின் நோக்கம் தெரிந்துக்கொள்ள ஒரு அமெர்த்ய சென்னின் சேவை தேவைப்படுமா தலைவா? மக்களுக்கு யார் சொன்னது ஆன்மிகம் பேசுபவனெல்லாம் துறவியாக வேண்டுமென்று ,துறவி என்றால் காவி உடுக்க வேண்டும் என்று. காவி உடுத்தால் பெண்மையை தீண்டக்கூடாது என்று. ஆங்கில கல்வி கொடுத்தது ஒரு வேலைக்கான உத்தரவாத படிப்பை தான். நம்மூரின் விவசாயங்களை குறித்தோ இயற்க்கை சூழலை குறித்தோ, நம்மிடம் இருந்த அறிவுகளை குறித்தோ நமக்கு தெரியாது. சீனன் அவனை படிக்கிறான், ஜேர்மன் ,பிரெஞ்சு அப்படி தான். இதெல்லாம் கூட நம் பிரச்சினைகளின் அடித்தளங்கள் தான்.
நெத்தியடி ... ஆனாலும் இதுகளுக்கு எல்லாம் அறிவு வராது....
நேற்று வரை நித்தி யின் புத்தகங்களை பிரசுரம் செய்த விகடன், இன்று ஆ சிரமம் கட்டுரை எழுதுகிறது.
பதிவர்களாகிய நாம் இந்த மாதிரி பொறுப்பு அற்ற குமுதம், விகடன், குங்குமம் பத்திரிக்கைகளில் நம் பதிவு, கவிதைகள் வருவதை தானே இத்தனை நாட்கள் சாதனையாக இங்கே கொண்டாடினோம்.
நல்லா சொன்னீங்க...
இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:
ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?
http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html
கருத்துரையிடுக