வெள்ளி, 29 ஜனவரி, 2010

அழகிரி அவதார் ...உக்கார்ந்து யோசிப்பாய்ங்களோ...!

ஜனவரி 30 அண்ணனுக்கு 59‍வது பிறந்தநாள். மதுரையில் திரும்பிய திசையெல்லாம் போஸ்டர்ஸ். அதில் எங்கும் நீக்கமற காணக்கிடைக்கிறது அழகிரி வாழ்த்துப் பாக்கள்.(முன்னக்கி இப்ப குறைஞ்சிடுச்சோ?) சொறிந்து விடுவதற்கு அவார்டு கொடுத்தால் அழகிரி விசுவாசப்படையின் சிலர் திருமங்கலம் வாக்கு அளவுக்கு வாங்கிக் குவிப்பார்கள். என்னாமா ஃபீல் பண்ணி இருக்காங்க.. கீழே படிச்சுப்பாருங்க!

தென்னகத்து தெனாலி, தாடியில்லா பெர்னாட்ஷா, அன்பின் அரிதாரமே(என்ன எழவுடா இது?), கிங் மேக்கர்,(மீல் மேக்கரையும் சேர்த்துக்க வேண்டியதுதானே?),மதுரை ஒபாமா, மதுரைப் பெரியாரே, கற்பக விருட்சமே..., கழகத்தின் எந்திரன்,(அட!) ரோபோவே (இன்னொரு அட!)‌,ஹிட்லர்( அடங்கொன்னியா ஹிட்லர் என்ன பண்ணுனானு தெரியாமலே இப்படி ஃபீல் பண்ணுறாய்ங்களே!) பை‍ எலெக்ஷன் சூப்பர் ஸ்டார்!( !!!),
தென்னகத்தின் அரசரே! (தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டேனு கூப்பிடவேண்டியதுதானேப்பா!)உலகத்தின் வீரன் சேகுவரன்..நாங்கள் காணும் வீரன் அஞ்சாநெஞ்சன்!( யோவ், சே குவேராவை சேகுவரன்னு ஏதோ ரகுவரன் ரேஞ்சுக்கு ஆக்கிப்புட்டீங்களேப்பா!)

அழகிரி அண்ணனே எனக்கு புகழ்ச்சி வேண்டாம்னு சொல்லிட்டாரேப்பா.. அட.. வைக்கிறதுதான் வைக்கிறீங்க. கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டாம வைக்கப்புடாதா? முடியல சாமீயோவ்!

5 கருத்துகள்:

மகேந்திரன் எட்டப்பராசன் சொன்னது…

செம்மொழி கொண்டானின் தவப்புதல்வர் அஞ்சாநெஞ்சர் அடிப்பொடிகளின் தமிழறிவை என்னன்னு சொல்ல! http://vitturungamudiyala.blogspot.com/2010_01_23_archive.html

vinu சொன்னது…

என்னமா .. பீல் பண்ணி .. கூவி இருக்கானுங்க ....................

sathishsangkavi.blogspot.com சொன்னது…

இல்ல நண்பரே இவர்கள் எல்லாம் உட்கார்ந்து, குப்புறப்படுத்து, ரூம் போட்டு அதையும் தாண் யோசித்து இருக்கிறார்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அப்படிப் போடுங்க அருவாளை...

யூர்கன் க்ருகியர் சொன்னது…

நல்லா டமாஸ் பன்றாங்கையா !!