செவ்வாய், 26 ஜனவரி, 2010
தோழர் முத்துக்குமார் நினைவு அஞ்சலிக் கவிதை!
முத்துக்குமார்...
அகண்ட தமிழினத்தின்
அணையா தீபமே!
எரியவில்லை தோழா
மண்ணைக் காக்க
மலர்ந்த மாவீரன் நீ!
வீழவில்லை தோழா
தமிழீழ விடியலுக்காய்
எழுந்த சூரியன் நீ!
நீ உரசிய நெருப்பில்
பற்றிக் கொண்ட
தீப்பந்தம் ஆறு கோடி!
நீ எழுதிய எழுத்தில்
கிழிந்து விட்டது
அதிகார வர்க்க முகமூடி!
இறப்பில் பிறந்தவனே
எம் கண்கள் திறந்தவனே
நீ தந்த எழுச்சியில்
தொடரும் போராட்டம்
அணையாத புரட்சியில்
மலரும் தமிழீழம்!
கடந்த வருடம் முத்துக்குமாரின் மறைவின் போது என் நண்பன் ராஜூமுருகன் எழுதிய கவிதை இது. நினைவு நாளுக்காக (ஜனவரி 29ம் தேதி) அதை அப்படியே மீள்பதிவு செய்கிறேன்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக