சனி, 23 ஜனவரி, 2010

நம்ம பாங்காக்கு சரக்கு நல்ல சரக்கு!



மாலைநேரத்து மயக்கத்துக்காக ஏங்கித் தவித்து.. நண்பர்களோடு கல்யாண வீட்டு ஜமாவில் கலந்து கிங்ஃபிஷர் லெஹர் பீரில் ஆரம்பித்து.. அப்படியே எம்.சி, ஜானக்ஸா, மானிட்டர், ட்ரிப்பிள் எக்ஸ், ஓல்டு மாங்க் என்று பெக்கு பெக்காய்( கொஞ்சம் கொஞ்சமாய் என்ற சொல்லுக்கு இணையான பதம்) பரிணாம வளர்ச்சியுற்று ராவானாலே ராவாக அடிக்கும் அளவுக்கு முன்னேறி உள்ள தமிழ்க்குடிமகன்களுக்குத்தான் இந்தப் பதிவு சமர்ப்பணம்!

என்ன சரக்கு அடிச்சாலும் எறும்பு கடிச்சமாதிரியே இருக்கா? அப்போ இந்தப் பதிவு உங்களுக்கு ரொம்பவே உதவக்கூடும். கொஞ்சம் பைசா இருந்துச்சுனா ஒரு தபா தாய்லாந்துக்கு போயிட்டு வாங்க. இயற்கை அன்னை வளமையான செழுமையைக் காட்டிநிற்க.. அழகான யுவதிகள் தங்கள் இளமையை காட்டி நிற்பார்களே அதே பாலியல் தொழிலின் சொர்க்கபுரி பாங்காக்தான் தாய்லாந்தின் தலைநகரம். (நம்ம செல்வராகவன், யுவன் அன்ட் கோ முன்னெல்லாம் அங்கே வச்சுதான் ட்யூன் கம்போஸ் பண்ணுவாங்களாம்)


இங்கு கிடைக்கும் சரக்கு அகில உலக அளவில் படு பிரசித்தம். உலகம் முழுவதுமிருந்து வருடமொன்றுக்கு பத்து மில்லியன் 'குடி'மகன்கள் இந்த 'உவ்வே' சர‌க்கின் கிக்குக்காக பறந்து வருகிறார்கள். அப்படி என்ன 'உவ்வே' என்கிறீர்களா? பாம்பு மிதக்கும் விஸ்கி(கோப்ரா ஸ்நேக் விஸ்கி), தேள் மிதக்கும் வோட்கா (ஸ்கார்பியன் வோட்கா), பூரான் ஒயின், (ஜெயிண்ட் சென்டிபேட் ஒயின்), என எல்லாமே பர்த்தாலே பதறவைக்கும் கொஞ்சம் கலீஜான ரகம். உயிரோடு பிடிக்கப்பட்ட இத்யாதி ஜந்துக்களை அப்படியே சரக்கு பாட்டிலுக்குள் போட்டு 'சரக்கு சமாதி' செய்து மூடி சீல் வைத்து மாசக் கணக்கில் ஸ்டோர் பண்ணி வைத்து விடுகிறார்கள். பார்ப்பதற்கு விலங்கியல் லேபிற்காக‌ பாடம் பண்ணணப்பட்டதைப்போலவே இருக்கும் இந்தப் பாட்டில்களை வாங்கி வீக் என்ட் பார்ட்டிகளில் குடிக்கிறார்கள் அந்நாட்டின் குடிமகன்கள். அந்நாட்டில் இப்போ இதுதான் பலபேருக்கு குடிசைத் தொழில்! அவங்க நாட்டு ஆளுங்களுக்கு சல்லிசான ரேட்டுல சரக்கு ஈஸியா கிடைச்சாலும் இவ்ளோ பெரிய பாம்பை பக்கத்துல பார்த்திராத ஃபாரின்காரங்களுக்கு செம கில்மா ரேட்டை ஃபிக்ஸ் பண்ணி போணி பண்ணுகிறார்கள்.  இந்த சரக்கு பாட்டில்களை வாங்கி தங்கள் வீட்டின் மினி பாரில் வைத்துக் கொள்வதை பெருமையாக நினைக்கும் அகில உலக குடிமகன்கள் பச்சைப் பாம்பில் ஆரம்பித்து ராஜநாகம்வரை நம்ம ஊர் மதிப்பில் ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் இதுக்காக கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஒரே பாட்டிலுக்குள் மூன்றுமே மூர்க்கமாக மிதந்தால் ரேட்டு எக்கச்சக்கமாம்! இப்போதெல்லாம் தாய்லாந்தில் ராஜநாகம், கருந்தேள் போன்ற அதிக விஷமுள்ள ஜந்துக்களை உயிரோடு பிடிப்பதற்காகவே கும்பல்கும்பலாய் கிளம்பிவிட்டார்கள். இந்தக் கண்றாவிக்கு ட்ரெயினிங்வேறு கொடுக்கிறது ஒரு பிரபல சரக்கு கம்பெனி.




'அட, அப்படி என்னதான்யா இந்த கண்றாவி சரக்குல இருக்கு?'னு நீங்க கேட்குறீங்கதானே? அவங்ககிட்ட இதே கேள்வியைக்கேட்டால் செமகூலாக‌ இப்படி சொல்கிறார்கள்: ''பாம்புசரக்கு பலான பலானதுக்கு ரொம்ப நல்லது..இப்படி அதிக விஷமுள்ள ஐயிட்டங்களை உள்ளே போட்டு குடிக்கிறதால சரக்கு செம கிக்கா இருக்கிறதோட உங்களுக்கு 50 வயசுதாண்டியும் இள‌மை அப்படியே இருக்கும்!"






அப்புறம் என்ன.. வாலிப வயோதிக அன்பர்களே.. அப்படியே ஒரு எட்டு பாங்காக்போய் பாம்பு சரக்கு அடிச்சுட்டு வரவேண்டியதுதானே? அப்படி அடிச்சுட்டு வந்தா மறக்காம‌ உங்க உச்சி மண்டையில விர்ருன்னு சுர்ருனு டர்ருனு இருந்தா மறக்காம எனக்கு மெயில்தட்டுங்க!




பின்குறிப்பு: படங்களைப் பார்த்து சரக்கடிக்காமலேயே நீங்கள் வாந்தி எடுத்தால் நான் பொறுப்பல்ல!

1 கருத்து:

துபாய் ராஜா சொன்னது…

ஆஹா... பாங்காங் சரக்குன்னு வந்தா பாம்பு சரக்கு படம் காமிச்சு பயம் காட்டிட்டிங்களே.... :))