புதன், 13 ஜனவரி, 2010

விருது வாங்கலீயோ விருது!


    விகடன்ல இது விருது சீஸன்! நியூ இயர் ஸ்பெஷல் இஷ்யூல சென்ற வருட சம்பவங்களுக்கும் சம்பவமாகிப்போனவங்களுக்கும் ஸ்பெஷல் அவார்டு கொடுப்பார் நம்ம காமெடி குண்டர். அதே ஸ்டைலில் நாமளும் பத்த வைக்கலாமே என மெனக்கெடாமல் பொட்டிதட்டியதில் சிக்கியதுதான் கீழ்கண்ட அவார்ட்ஸ். நிச்சயமாக விகடன் பாதிப்பில் எழுதியது அல்ல. இதை ரொம்பநாளைக்கு முன்னமே எழுதி ட்ராஃப்ட்டில் போட்டு வைத்திருந்தேன். படிச்சுப்பாருங்க மக்கா!
     மிஸ்டர் விருதுநாயகன் விருது:  கருணாநிதி! விருதுக்குமேல் விருதாக வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் தமிழனத் தலைவன் சென்ற வருடத்தில் மட்டும் 326 விருதுகளை வாங்கி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். இவரைவிட 2 கூடுதலாக பெற்று ரஷ்ய சர்வாதிகாரி டிக்கா புலவ் (சிக்கன்  புலாவ் அல்ல)  328 விருதுகளை வாங்கிக்குவித்திருந்தார். அநேகமாக அடுத்த வாரத்தில் இரண்டு ஜெகத்களில் ஒரு ஜெகத் இந்த சாதனையை முறியடிக்க உதுவுவார்கள் என்று நினைக்கிறேன். கள்ளக்குடி கண்ட நாயகனுக்கு இது எம்மாத்திரம்! வாங்குவதில் மட்டுமல்ல விருதுகளை வாரி வழங்குவதிலும்கூட இவர் சாதனை நாயகன்தான்! என்னத்தே கன்னையாவில் ஆரம்பித்து ரஜினி வரை லிஸ்ட் ரொம்ப பெருசு! 
    மிஸ்டர் வருத்தகிரி விருது: விஜயகாந்த்! மக்களோடு கூட்டணி என முழக்கமிட்ட விருத்தகிரி இடைத்தேர்தல் முடிவுகளில் வருத்த பொரியாகிப்போனதுதான் சென்றவருட அய்யோ பாவம்! 'மரியாதை'கெட்டுப்போனதால் இப்போ கூட்டணி குருமாவைக் கிண்ட ஆயத்தமாகிவிட்டார். பப்பு வேகுமாங்கிறதுதான் தெரியலை! 
      மிஸ்டர் புலிகிலி விருது: திருமாவளவன்!அசிலி பிசிலி் புலி வேஷம் போட்டுக்கிட்டு தேர்தலுக்கு பயந்து காங்கிரஸுடன் இளித்துக் கொண்டு கூட்டணி பிடில் வாசி்த்த‌ திருமாவின் உருமா அவுந்து போனதுதான் சென்றவருட 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!' இப்போ முள்வலி எழுதி தன்னை புலியாக அடையாளம்காட்டிக் கொண்டு திரிகிறது இந்தக் கழுதைப்புலி! 
    மிஸ்டர் நூடுல்ஸ் விருது:  மருத்துவர் அய்யா ராமதாசு! இடைத்தேர்தல் போங்குனு சொன்ன அதே வாய் இப்போ பென்னாகரத்தில் ஓட்டுக் கேட்டு நிக்கப் போகுதாம். அன்புச் சகோதரியா ஆருயிர் அண்ணனா என்ற நூடுல்ஸ் குழப்பத்தில் போனவருடம் தொட்டதெல்லாம்  சிக்கல்தான். தே.மு.தி.க‍வையாவது முந்திக்காட்டணும் என சோலை கட்டுரை எழுதி  ஆக்ஸிஜன் ஏற்றவேண்டிய நிலையில் இருக்கிறது கட்சி. உச்சகட்டமாக‌ தோல்விக்கு ஓட்டிங் மெஷினையே காரணமாகச் சொல்லி புது மெஷின் கண்டுபிடித்து டெமோ பண்ணிக் காட்டியது நூடுல்ஸின் ஹைடெக் காமெடி தமாக்கா!
    மிஸ்டர் ஜெகஜ்ஜாலக் கில்லாடி விருது பாதிரி ஜெகத் கஸ்பார்! ஜெக(த்)ஜ்ஜாலக் கில்லாடி என்பது பேரிலேயே இருக்கிறது. தன்னை புலி நேசனாக காட்டிக் கொண்ட புலிப்பாண்டியின் இன்னொரு முகம் விமர்சனத்துக்கு உள்ளாகி டர்ருனு கிழிஞ்சதுதான் சென்றவருட ஸ்பெஷல் கவன ஈர்ப்பு. ஈழப்பிரச்னையை மையமா வச்சு இவர் குவித்த பணத்துக்காகவே கில்லாடி அவார்டு கொடுக்கலாம். அதிகார மட்டத்திலும் நுழைந்து சென்னை மராத்தான், சென்னை சங்கமம் என இவர் காசு பார்த்ததற்கு கில்லாடி கா ஜான் விருதும் போனஸாக‌ கொடுக்கலாம்!
    மிஸ்டர் அஜால் குஜால் விருது:  தேவநாதகுருக்கள்! கருவறையை பள்ளியறையாக மாற்றிய காமக் கைப்புள்ள தேவநாத குருக்கள். பண்ற சேட்டையை டப்பா செல்போனில் ஸ்டோர் பண்ணி வைத்ததால் காஞ்சிபுரத்தை அகில உலக அளவில்  சென்ற வருடம் ஃபேமஸ் ஆக்கி்ய செக்ஸ் குரு. 
    மிஸ்டர் ஒண்டிப்புலி விருது:  சரத்குமார்! திருமங்கலம் பரீட்சையில் வெறும் 841 மார்க் வாங்கிய‌ மக்குபாய் இந்த ஜக்குபாய். கட்சி ஆரம்பித்த நோக்கம் தெரியாமல் ஒண்டிப்புலியாய் அந்தலை சிந்தலையாகி சித்தபிரம்மை பிடித்துத் திரிகிறார். இப்போ கலைஞர் பார்த்து ஏதாச்சும் வட்டம் மாவட்டம் போஸ்டிங் போடுவார் என்பதைப்போல நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒண்டிப்புலிக்கு பக்கத்தில் நொண்டிப்புலிகளாய் கார்த்திக் மற்றும் இல.கணேசன் வேறு நிற்கிறார்கள்.   
    மிஸ்டர் மஞ்சமாக்கான் விருது:  விஷால் ! 'புரட்சித் தளபதி', 'புரட்டாசி ஐப்பசி' என தனக்குத்தானே பட்டம் கொடுத்துக் கொண்டு ஓவர் பில்ட்‍அப் டயலாக்குகளால் இன்னொரு விஜய்யாக உருமாறிவந்தவர். (ஒரு விஜய்க்கே தமிழ்நாடு தாங்க‌லைடா சாமீ!) போனவருஷம் ரிட்டயர்ட் ஹர்ட்டகி பெவிலியனில் இருந்தார். பார்க்குறதுக்கு  மதுரையில் இருக்கும் பக்கத்துவீட்டு பையனைப்போலவே இருந்தாலும் நிஜத்தில் இந்த விஷால் ரெட்டி பணக்கார பந்தா பார்ட்டி. சென்னை பப்களில் வீக் என்ட் ஜாலி ஹோலி கொண்டாடும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பென்ஹர்' படத்தில் நடிப்பதைவிட கஷ்டமானது 'தீராத விளையாட்டுப் பிள்ளை'யாக நடிப்பது என  ஹேங் ‍ஓவரில்  over   பில்ட்‍அப் கொடுத்திருந்தார். அந்த ஒற்றை வரிப் பேட்டிக்காகவே பென்ஹர் படத்தை பார்த்திருப்பவன் என்பதால் இந்தப் பட்டத்தை தாராளமாக கொடுப்பேன். 
    மிஸ்டர் அட்றாசிட்டி விருது:  sun tv 
     குரங்கிலிருந்து மனிதன் வந்த பரிணாம மாற்றத்துக்கு நிகழ்கால உதாரணமாய் இருக்கும் நகுலனின் காதலில் விழுந்தேன் விளம்பரத்தை அடிக்கடி சேனலில் போட்டே ஹிட் பண்ணியதாய் அட்றாசிட்டி பண்ணியதுதான் சன் டி.வி‍யின் டண்டணக்கா அட்டகாசம். அது கொஞ்சம்கூட குறைவில்லாமல் வேட்டைக்காரன் வரை 'வாாாடா....!'என‌ தொடர்ந்து இன்னும் டன்கணக்கில் ஹைடெஸிபிலில் எகிறிக் கொண்டே போகிறது. மொக்கைப் படங்களை பிக்‍அப் பண்ணவைக்க இவர்கள் வைக்கும் சன்டிவி நேயர் போட்டிகள் அனைத்தும் ஸ்பெஷல் மெகா ஜிகா டகால்ட்டி.  இதுபோதாதென டாப் டென் மூவிஸை கையகப்படுத்தி பண்ணும் அட்றாசிட்டிக்கே கலாநிதிமாறனை ஆளில்லாத தீவுக்கு நாடு கடத்தலாம்!
     மிஸ்டர் 'அடப்பாவி' விருது:  'சின்னக் கொலைவாணர்' விவேக்! வாயிலே வாஸ்த்து சரியில்லைனா என்னவாகும்? பத்திரிகையாளர்களை வார்த்தைக் கொள்ளியால் போட்டுத்தாக்கிய விவேக் பிறகு அதே கொள்ளியால் சொறிந்து கொண்டு புண்பட்டுப்போனார். குமுதம் பேட்டியில் மன்னிப்பை எக்ஸ்பிரஸ் பண்ணியும் பிரஸ்ஸின் கோபம் தீராததால் அவரே சொல்லிக் கொள்கிறாராம் இப்படி: ''எப்படி இருந்தநான் இப்படி ஆகிட்டேன்!'"  
    மிஸ்டர் டெரர் டெர்மினேட்டர் விருது:   என்.கே.பி.ராஜா. கிராமத்திலிருந்து கிளம்பிவந்த சுள்ளான் ஹீரோவால் தன் இமேஜ் நமுத்துப்போகும் சினிமா இத்யாதி வில்லன்களை அசப்பில் டெமோ செய்து காட்டியதற்காக ஸ்பெஷலாய் இந்த அவார்டு கொடுக்கலாம் இந்த முன்னாளுக்கு !
    மிஸ்டர்.டெல்லி டேர் டெவில் விருது:  நாக்க மு.க.அழகிரி!இங்கிலீஷுக்குப் ப‌்யந்து பார்லிமெண்ட்டுக்குப் போகாத டோங்கிரி அழகிரி. 'மதுரைப்பக்கம் தாண்டா டெரர இருப்பேன்.. டெல்லிக்குப்போனா காமெடியா  இருப்பேன்' என வடிவேலு ஸ்டைலில் சொல்லாமல் சொல்லும் அழகிரிதான் சென்றவருடத்து கி்ளாஸ் கட் கி்ளாடிப் பையன்.  
    மிஸ்.சீனியர் சிட்டிசன்ஜெயலலிதா!  'கொடநாடு கோல்டுடைத்து' என கம்பளிக்குள் நித்திரை கொண்டு அவ்வப்போது அறிக்கையும் பவ்ய தொண்டர்களை கொடநாட்டுக்கே வரவழைத்து அரசியல் பண்ணியதுமாய் ஜெயா மேடம் போனவருஷம் முச்சூடும் கொண்டாடியது 'செம ஜாலி டேஸ்'! 

  மிஸ்டர் காமக்காட்டேறி விருது:  என்.டி.திவாரி!
"
இந்த வயசுல எப்புடிப்பா?" என்று டீக்கடைகளில் பேப்பர் படித்தபடி ஒட்டுமொத்த இந்தியாவையும் முணுமுணுக்க வைத்த ஆந்திர கவர்னர் நரி. காதலன் படம் பார்த்தபோது 'இந்த ஷங்கருக்கு மூளையே இல்லைப்பா... போயும்போயும் ஒரு கவர்னரைப் போயி இம்புட்டு வில்லத்தனமா காட்டி இருக்காரே'னு நொந்த காலமெல்லாம் உண்டு. கவர்னர் பதவின்னா அம்புட்டு மருவாதினு நினைச்சுருந்த என் நினைப்புல ஒரு லோடு மண்ண அள்ளி கொட்டிப்புட்டாரு நம்ம காட்டேறி நரி! ராஜ்பவனையே ராஜலீலை பவனா மாத்திக் காமக்களியாட்டம் நடத்தி 'சுகப்படு..சுகப்படுத்து' என்ற காமமுழக்கமிட்ட என்.டி.திவாரி சாருக்கு அவார்டுடன் சேர்த்து சிட்டுக்குருவி லேகியம் ஒரு டப்பா பார்சல்!

1 கருத்து:

அண்ணாமலையான் சொன்னது…

நல்லா கலக்கிட்டீங்க