புதன், 25 மார்ச், 2009

பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும்!


பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும்!

சமீபத்தில் உலக அழகிப்பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட பார்வதி ஓமனக்குட்டன் சென்னை வந்திருந்தார். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் அறிவித்திருக்கும் ‘ஹிருதய மலர்’ என்ற பெண் குழந்தைகளுக்கான இலவச அறுவை சிகிச்சை திட்டத்தின் பிராண்ட் அம்பாஸிடராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். விழா முடிந்த பிறகு கிடைத்த நேரத்தில் அவருடன் பேசும் ‘அரிய’ சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அழகி என்ற கர்வம் துளியும் தொனிக்காமலே அதே சமயத்தில் ஆழமான பார்வையை என்மீது வீசியபடி பேசினார் பார்வதி!
‘‘சென்னை எப்படி இருக்கு?’’
‘‘ரொம்ப அழகா இருக்கு. சென்னை மக்கள் ரொம்ப அன்பா உபசரிக்குறாங்க. இன்னும் பொண்ணுங்களும் பசங்களும் இயல்பான அழகோட இருக்குறது ரொம்ப பிடிச்சிருக்கு! மும்பை அளவுக்கு இங்கே டிராபிக் பரபரப்பு இல்லாட்டியும் வேலை விஷயத்துல பரபரப்பா இயங்குற வாழ்க்கைமுறை எனக்கு பிடிச்சிருக்கு. நான் கேரளப் பெண்ணுன்னாலும் ஒரு வயசு ஆகுறத்துக்குள்ள மும்பைவாசியாகிட்டேன். அதனால சென்னை எனக்கு புதுசுதான். சென்னை பல ஜீனியஸ்கள் பிறந்த ஊருங்கிறதால இந்த ஊர் மேல எப்பவும் ஸ்பெஷல் மரியாதை உண்டு.’’
‘‘தமிழ் சினிமால நடிக்கப் போறீங்களாமே?’’
‘‘இதுவரைக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வரல. எனக்கு சினிமா மேல எப்பவும் ஈர்ப்பு உண்டு. ஒருசில பாலிவுட் வாய்ப்புகள் வருது. மலையாளத்துலயும் கூப்பிடுறாங்க. எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் ரொம்ப பிடிக்கும். தெலுங்குல நிறைய வாய்ப்புகள் வருது. நல்ல வாய்ப்புகள் வந்தா எல்லா மொழிகளுக்கும் ஓ.கே சொல்லிடுவேன்!’’ (சிரிக்கிறார்... தெய்வீக சிரிப்பும்மா உனக்கு!)
‘‘பார்வதி எப்படிப்பட்ட பொண்ணு?’’
‘‘எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற அழகான பொண்ணு. தன்னம்பிக்கை ஜாஸ்தி. தற்காப்புக் கலைகள் எல்லாத்தையும் கத்துக்கணும்னு ஆசை.. அப்புறம் பயங்கர அம்மாச் செல்லம். தென்னாப்பிரிக்கால இருந்து அழகிப்போட்டி முடிஞ்சு நம்ம நாட்டுக்கு வந்ததும் நான் பண்னின முதல் விஷயமே அழகி அது இதுன்னு கட்டுப்பாடுகள் இல்லாம அம்மா கையால விருப்பட்ட சாப்பாட்டை சாப்பிட ஆரம்பிச்சதுதான். ஆனா வெயிட் போடாத அளவுக்கு ஜிம் போயிடுவேன். அந்த கான்ஷியஸ் நிறையவே உண்டு! படிப்புல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்காத பொண்ணு!’’
‘‘உலக அழகிப்போட்டியில தோற்ற வருத்தம் இன்னும் இருக்குதா?’’
‘‘இல்லவே இல்லை. நான் ஏற்கனவே சொன்னமாதிரி எனக்கு தன்னம்பிக்கை நிறைய உண்டு. இது கிடைக்கலைனா என்ன? இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கே.. வாழ்க்கையில நமக்கு நடக்குற சம்பவங்கள் எல்லாமே நல்லதா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா நல்ல அனுபவங்களை கொடுக்கும்! நான் தோற்றது நிச்சயம் நல்ல அனுபவம்தான்... என் தவறுகளை திருத்திக்கலாம் இல்லையா?’’
‘‘அடுத்து என்ன பண்ணப் போறீங்க?’’
‘‘ம்... இப்போதைக்கு சாப்பிடப் போறேன்..!’’- அழகாய் சிரித்தார் பார்வதி ஓமனக்குட்டன். அழகுப் பெண்கள் சிரிப்பதும் அவஸ்தைதான் போங்க!

3 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

ஜெயிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்.

ரவி சொன்னது…

இது எதுல வந்த இண்டர்வியூ

நீங்களே எடுத்ததா ?

சரண் சொன்னது…

எதிலும் வராத இன்டெர்வியூ...ஆமா செந்தழல் ரவி அவர்களே நானே எடுத்தது!