சனி, 2 ஜூன், 2007
ஹரியை போட்டுத் தள்ளுங்கப்பா!
ரெண்டு நாளைக்கு முன்னால காலையில அரைத்தூக்கத்துல எழுநதிருச்சு டீ குடிக்க போனேன். திருவல்லிக்கேணி எஸ்.எஸ் மியூஸிக் பக்கத்திலதான் அடியேன் ஜாகை! ஜானி ரஜினி ஸ்டைல்ல எந்திருக்குறதுதான் என் பழக்கம். ராஜினி டீ ஸ்டால்ல கண்ணை இடுக்கிக்கிட்டே டீ குடிச்சுக்கிட்டு இருந்தேன். தூரத்துல மங்கலா ஒரு போஸ்டர்.. பார்த்து பயந்துட்டேன். அருவாளைத் தூக்கி மிரட்டிக்கிட்டு நிக்கிறாரு நம்ம சூர்யா.. வேல் பட போஸ்டராம். ஹரியின் இயக்கமாம். அடங்கொக்கமக்கா.. இந்த ஹரி அடங்க மாட்டார் போலிருக்கே..? 'பிரிக்க முடியாதது என்னவோ?' லிஸ்ட்ல ஹரியும் அரிவாளும்னு சேர்த்துக்கலாம் போல.. இவருடைய சமீபத்திய படங்கள் எல்லாத்துலயும் யாரோ யாரையோ போட்டுத் தள்ளிட்டத்தான் இருக்காங்க. அவருக்கு அப்படி என்ன கொலைவெறியோ தெரியலை. தெலுங்கு தேசம் கூட இப்ப நல்ல சினிமா பக்கம் திரும்பிட்டாங்கப்பு.. இந்த ஹரிவாள் கலாச்சாரத்துக்கு ஹரி என்னைக்குத்தான் முறறுப்புள்ளி வைக்கப் போறாரோ?
கொய்யால..யாராவது ஹரியை போட்டுத் தள்ளுங்கப்பா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக