வியாழன், 12 ஆகஸ்ட், 2010
தம்பி டீ இன்னும் வரல!
முன் செல்லும்
சக்கரத்தை
தொடரும்
பின் சக்கரம்
எந்த விருப்புவெறுப்புமின்றி!
ஆவி..
பேய்..
பில்லி சூன்யம்..
'நிஜம்'நிகழ்ச்சியில்
ஒரே பொய்!
தொண்டேதும்
செய்யாமல்
பழுத்த கிழம்
என் தாத்தா!
ஆளில்லா
ஊருக்கு
இலுப்பைப் பூவும்
சர்க்கரையும்
என்னாத்துக்கு?
வயர்க்கூடை பின்னும்
தாவணிப் பெண்கள்
எங்கெங்கு தேடினும்
இல்லையடா!
துக்கவீட்டிலும்
மனம்
பந்திக்கு அலையுது!
கைராசி டாக்டருக்கு
முகராசி சரியில்லை
சோரம் போகிறாள்
மவராசி!
எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை
ரம்பா
இலக்கிய வட்டம்
பதிவர் வட்டம்
போகவொண்ணா
துயரக்கூட்டம்
நாங்கள்!
சூடிக் கொடுத்த
சுடர்க்கொடியை
கூடிக் கெடுத்தாள்
கயல்விழி!
மதராசபட்டினம்
பார்த்த இரவில்
காதலிக்கத் தொடங்கினேன்
சிங்காரச் சென்னையையும்..
சிங்காரி எமியையும்!
ஈட்டிக்காரனுக்குப் பயந்து
ஓடி ஒழிகிறார்
'அள்ள அள்ள பணம்'எழுதிய
பிசினெஸ் ரிப்போர்ட்டர்!
க்ளைமாக்ஸ்
மக்கள் பேட்டி
எந்திரனிலும் இருக்கக்கூடும்!
'பேய் இல்லை'
புத்திக்கு விளங்கினாலும்
பேதலிக்கிறது மனசு
சுடுகாட்டைக் கடக்கும்போது!
எங்கெங்கு தேடினும்
நகரத்தில் இல்லை
வாடகை சைக்கிள்!
மயிர்நீத்தும்
உயிர்வாழும்
கவரிமான்
நான்!
லேக் ஏரியாவில்
லேக் எங்கே?
காதலித்துப் பார்
தலைக்குமேல்
ஒளிவட்டம் தெரியும்
லாக்அப்பில்!
கொடுமை கொடுமையென
கோவிலுக்குப் போனால்
அங்கோர் கொடுமை
கோர்ட்டுக்குப் போகுது!
இதயம் கனிந்த
வாழ்த்துகள் சொல்லும்
டிஜிட்டல் பேனரில்
எத்தனை இதயம்
உண்மையில் கனிந்தது?
நூத்தைம்பது கோடியில்
படமெடுப்பவர்களுக்கு
கருட புராணத்தில்
கும்பி பாகமா..அந்தகூபமா?
பஜனை கோவில்
தெருமுக்கில்
சுரேஷ்கோபி பஜ்ஜிசுட
மம்மூட்டி டீ ஆத்துகிறார்!
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்
அதற்கப்பால்
எப்பால்?
கமெண்ட் எழுதுவதற்காகவே
'வால்'எழுதுபவனை
கமண்டலத்தால்
கபாலத்தில் அடி!
'எழுச்சி இளைஞனே
எழுந்து வா!'
இன்னும் சில
சினிமாக்கள் உருவாகட்டும்!
இன்னும் சில
சேனல்கள் முளைக்கட்டும்!
செம்மொழி இணைய மாநாட்டில்
வலைப்பூக்களைவிட
வாழைப்பூ வடைக்கு
அதிக ஹிட்ஸ்!
'வாழ்க்கை சூப்பராப்போகுதுடா!'
செல்பேசிச் செல்லும்
பைக் வாலிபனுக்குத் தெரியாது
அரைமணிநேரத்தில்
உயிர் பிரியப்போவது!
ஒழுக்கம்
விழுப்புண் தரலாம்..
சிலநேரம்
உயிரும் எடுக்கப்படும்!
நியூட்டனின்
மூன்றாம் விதி
தெரிந்த அளவுக்கு
முதலிரண்டு விதிகள்
யாருக்குத் தெரியும்?
சிக்மெண்ட் பிராய்டின்
சிக்கலைவிட
சிக்கலான என் தலைமுடி
இப்போது
பூஜ்ஜியத்தைப் போல
சிம்பிளாய்!
'நீர் கண்டு அமர்!'
இல்லையேல்
பொழப்பு நாறிவிடும்!
உயிரோடிருந்தால்
என்ன சேனல்
வைத்திருப்பார்
எம்.ஜி.ஆர்?
டான் தீட்டா..
சைன் தீட்டா..
காஸ் தீட்டா..
ஆமாம்
மூன்றுமே
எனக்குத் தீட்டு!
கணபதி பிள்ளையின் மகனையும்
யாரேனும் சொல்லக்கூடும்
கணபதி பிள்ளையென்று!
நல்லதோர்
வீணைசெய்தே
நலம்பெற
சேட்டுக்கடையில்
அடகு வைத்தேன்!
நவரசத்தில்
எந்த ரசம்
மிளகு ரசம்?
புத்தியே தீட்டு..
கத்தியைத் தீட்டு!
சினிமா கொடுத்த
இனிமாவால்
மீண்டும் போனான்
சாஃப்ட்வேர் வேலைக்கு!
ராவணன் படத்தை
தராசில் நிறுக்க
நேரமில்லை
ஹாசினி மேடத்துக்கு!
கடைசிவரை
நடக்கவே இல்லை
காதல் திருமணம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக