'
| ||
| ||
இந்தியாவின் வட கிழக்கு மூலையில் முடங்கியிருக்கும் மாநிலங்கள் மிசோரம், நாகாலாந்து, திரிபுரா. வழக்கமாக இம்மாநில தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவிகிதம் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கும். தீவிரவாதம், வறுமை, அரசாங்கத்தின் மீது வெறுப்பு காரணமாக இந்த மாநில மக்கள் வாக்களிப்பதை வம்படியாக தவிர்த்து வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அசாத்திய 92 சதவிகிதம்! ''வாழ்த்துக்கள் சார்! பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸின் மதுரை டு டெல்லி வார்ப்பு பற்றி..?'' ''அப்புறம், எப்படி ஐ.ஏ.எஸ்..?'' ''அதற்குப் பெருந்தலைவர் காமராஜரும் ஒரு காரணம். பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் ஆகவேண்டுமென்ற ஆசை காரணமாக மேடைப் பேச்சுகளில் அதிக அளவில் பங்கெடுத்து வந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் பெருந்தலைவர் காமராஜரின் முன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அது முடிந்தவுடன், அவருடன் ஒரே காரில் பயணம் செய்யும் பேரதிர்ஷ்டம்! அப்போது காமராஜர் என்னி டம், 'நீ நல்லா பேசுறடே! ஐ.ஏ.எஸ்., பண்ணி சேவை செய்யி! புரிஞ்சுதாடே!' என்றார். அந்தச் சமயம் சும்மா தலையாட்டி வைத்ததோடு சரி. ஆனால், நான் பத்திரிகைப் பணியின்போது மாவட்ட கலெக்டருக்குக் கிடைக்கும் மரியாதையைப் பார்த்து வியந்திருக்கிறேன். உள்ளுக்குள் ஓர் ஓரமாக ஐ.ஏ.எஸ்., ஆசை துடிக்க ஆரம்பித்த சமயம், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. அதற்கு விண்ணப்பித்துவிட்டு, தேர்வுக்கு முந்தைய நாள் வரை வீதிநாடகங்களை இயக்கி, நடித்துக் கொண்டு இருந்தேன். அதே போல ரிசல்ட் வந்த அன்று அலுவலகத்தில் பரபரப்பான 'நைட் ஷிஃப்ட்'! அப்போது இந்தியா முழுக்க ஐ.ஏ.எஸ்ஸாகத் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் டெலிபிரின்டரில் தந்தியடித்துக்கொண்டு இருந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தப் பட்டிய லைப் புரட்டினால், நானும் தேர்வாகி இருந்தேன். நம்பவே முடியவில்லை. அன்று தமிழக சட்டசபை வரை என் தேர்வு பாராட்டப்பட்டது. தமிழுக்கு நன்றி..!'' ''இந்தியத் துணைத் தேர்தல் ஆணையர் பொறுப்பு பற்றி..?'' ''கலெக்டராக ஒரிஸ்ஸாவில்தான் எனக்கு முதல் போஸ்டிங்! தமிழனாக இருந் தாலும் எனது பணித் திறன் காரணமாக அம்மாநில கலாசாரத் துறைச் செயலராக்கி, என்னைக் கொண்டாடினார்கள் அம்மாநில மக்கள். அந்தச் சமயம் ஒரிஸ்ஸாவில் வந்த புயல் வெள்ளத்துக்குப் பயந்து ஒரு மாவட்டத்தின் கலெக்டரே குடும்பத்தோடு ஊரைக் காலி பண்ணிக்கொண்டு ஓடிய சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த அசாதாரண நிலையில், அரசாங்க உதவிகளை மாவட் டத்தின் எல்லா மூலைகளுக் கும் கொண்டுசேர்த்தேன். 2004ம் ஆண்டு தேர்தலுக்கு தேதி அறிவித்த பின்னர், ஓர் அவசரச் சூழ்நிலையில் ஒரிஸ்ஸா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக என்னை நியமனம் செய்தது தேர்தல் ஆணையம். அடுத்த வருடமே பதவி உயர்வு கொடுத்து 'துணைத் தேர்தல் ஆணையரா'க டெல் லிக்கு வரவழைத்தது. மேற்கு வங்கம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் எனப் பல்வேறு தேர்தல் களங்களை எதிர்கொண்ட பிறகு, சரி யான சவாலாக வட மாநில தேர்தல்கள்!சுதந்திர இந்தியாவில் 60 வருட மாகியும், அடக்குமுறை காரண மாக ஒரு தேர்தலில்கூட வாக் களிக்க முடியாத பற்பல 'தலித்' கிராம மக்களை இந்தத் தேர்தலில் வாக்களிக்க வைத்ததுதான் எனக்கே மனநிறைவான சாதனை. வட கிழக்கு மாநில தேர்தல்களில் நான் முத்திரை பதித்துவிட்டதாக ஊடகங்கள் கொஞ்சம் மிகைப் படுத்தியே பாராட்டுகின்றன. அரசாங்க அதிகாரியாக நான் செய்ததெல்லாம், அங்குள்ள மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உண்டாக்கியது தான்! உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு என்ற பெருமைதான் இந்தியாவின் முகவரிச் சீட்டு. வாக்குகளை சரியாக எண்ண முடியாமல் வல்லரசு நாடுகளே மூச்சு வாங்குகின்றன. ஆனால் இந்தியத் தேர்தல் தரம் எவரெஸ்ட் சிகரம். அந்தச் சிகரத்தில் நானும் எனக்கான பாதையில் முன்னேறிக் கொண்டு இருக்கும் பெருமிதம் தான் என்னை தினமும் புது வெள்ளப் பாய்ச்சலோடு இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது!'' ''குடும்பம் பற்றி...'' ''மனைவி சுஜாதா, நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை விட சமூகவியல் ஆராய்ச்சியாளன் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கிற வித்தியாசமான இல்லாள். எங்கள் வீடு முழுவதும் அவரது தஞ்சாவூர் ஓவியங்கள்தான் ரசனை சேர்க்கின்றன. இரண்டு மகள்கள். மூத்த மகள் ஓவியா, கொல்கத்தாவில் சட்டம் படிக்கிறார். இளைய மகள் ஸ்மிருதி ப்ளஸ்ஒன். என்னைப் போலவே உருவாகும் முனைப்பில் இப் போதே தமிழில் பல சந்தேகங்கள் கேட்டுத் துளைக்கிறார்!'' ''தமிழ்நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்களா..?'' ''ஐ.ஏ.எஸ். தேர்வானதும் பயிற்சிக் காலத்தில் வடநாட்டு குக்கிராமங்களில் பணிபுரிந்தபோது தமிழக சேவைக்கு குழந்தையைப் போல ஏங்கி இருக்கிறேன். ஒரிஸ்ஸாவில் இருந்தபோது, தரையில் கிடக்கும் தீப்பெட்டியில் சிவகாசி தயாரிப்பு என்பதைப் பார்த்தெல்லாம் சந்தோஷப்பட் டிருக்கிறேன். மதுரை மாவட்டத் துக்குக் கலெக்டராக முடியவில் லையே என்ற ஏக்கம் இப்போதும் உண்டு! மற்றபடி, பண்பாடுகளில் பள்ளம், மேடு கிடையாது. மெரி னாவில் பானிபூரி சகஜம். வடக்கில் இட்லி, தோசைக்கு ஏக மரியாதை. நம்மூர் கோயில்களும், பேருந்து நிலையங்களும், மருத் துவமனைகளும் அகில இந்தியா வுக்கும் ஆச்சர்யம். நமது ஊடகப் பெருக்கம் உற்சாகம் அளிக்கிறது. இணையதளத்தில் தமிழுக்கு இணையில்லை. அதனால் எங்கிருந்தாலும் தமிழின் ஆளுமை என்னைக் கட்டிப் போடுகிறது!'' | |||
1 கருத்து:
Very good interview.
~tsekar
கருத்துரையிடுக