முன்குறிப்பு: இந்தப் பதிவு யார் மனசையும் புண்படுத்த அல்ல...பண்படுத்த மட்டுமே!
இன்னிய தேதிக்கு தமிழ்கூறும் நல்லுலகை தங்கள் மீது இருக்கும் நெருக்கம் காரணமாகவே வசியம் செய்து கூறுபோட்டு விற்கும் எதேச்சதிகார வேலையை செவ்வென செய்து வருகிறது சன் டி.வி! பிரச்னை சுழலில் சிக்கித் தவிக்கும் தமிழ் சமூகத்தின் வரவேற்பறைக்குள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்த சன் டி.வியின் சாதாரண வீடியோ இதழ் 'தமிழ் மாலை' இன்னிக்கு கோடிகளைக் குவிக்கும் சன் நெட்வொர்க். தமிழ்நாட்டில் ரத்தம் குடித்தும் இன்னும் வேட்கையடங்காமல் இன்னும் இன்னும் ரத்தம் குடிக்கும் ஒரு ரத்தக் காட்டேறியாக கண்டம்விட்டு கண்டம் தாண்டி மொழிகளுக்கு அப்பாற்பட்டு வெற்றி (?)நடைபோட்டு வருகிறது. 5 நிமிடங்களுக்கு ஒரு தடவை தங்களின் சினிமாவை போணி பண்ண இவர்கள் போடும் அட்றாசிட்டி விளம்பரங்களில் தாரைத் தப்பட்டைகளோடு நம் மக்களின் காது ஜவ்வும் கிழிந்து தொங்குகின்றன. தியேட்டரில் தமிழ்நாடே பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிடும் நோக்கத்தில் பொடனியில் அடித்து விரட்டாத குறையாக மொக்கைப் படத்திற்கே டிஜிட்டல் எஃபெக்ட் கொடுக்கும் சன் டி.வியின் மாஸ்டர் மைண்ட் கலாநிதி மாறன் அண்ணன் தன் ரூட்டை எப்போது மாற்றுவாரோ தெரியவில்லை. போதாக்குறைக்கு மற்ற சேனல்களின் டி.ஆர்.பியை கண்கொத்திப் பாம்பாக பார்த்து.. உடனே மூக்கு வியர்த்து உட்டாலக்கடி செய்துவிடுவதில் அண்ணன் சூப்பர் ரீமேக்கர்! உதாரணத்துக்கு 'ஆடவரெல்லாம் (அவுத்துப் போட்டு) ஆடவரலாம்!, டீலா நோ டீலா இன்ன பிற.. இந்த நிகழ்ச்சிகள் வெளிநாட்டு உள்நாட்டு பிரபல சேனல்களின் உட்டாலக்கடி என்பது தெரிந்திருந்தும் எம்மக்கள் உங்கள் ஜிகினாக்களில் மயங்கிப் பார்த்துத் தொலைக்கிறார்கள். வெளுத்துத் தடிச்ச கலாநிதி மாறனண்ணா! உங்களுக்கு ஒரு சில வார்த்தைகள்... கோடானுகோடி மக்கள் பார்க்கும் சேனல் என்ற இறுமாப்பில் குப்பையான உங்கள் படங்களுக்கான டிரெய்லரை பார்க்கும் கட்டாயத்துக்கு ஏன் எங்களைத் தள்ளுகிறீர்கள்? கேட்க எவன் இருக்கான் என்ற இறுமாப்பு தானே.. ஒரே விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் அலறுகின்றன. தாய்மார்கள் எரிச்சலாகிறார்கள்.. என்போன்ற சாமானியர்கள் கெட்டவார்த்தைகளில் உங்களை அர்ச்சிக்கிறார்கள். உங்களுக்கு கேட்கவில்லையா? ஆளில்லாத ஊருக்கு இழுப்பைப்பூவான நீங்கள், உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் சேனலை மாற்றுவார்கள். ஏனென்றால் மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது. ஜாக்கிரதை! படம் நல்லா இருந்தா தியேட்டருக்கு நிச்சயம் போய் பார்ப்பான் நம் தமிழன். பருத்தி வீரன், சுப்ரமண்யபுரம், பசங்க, நாடோடி போன்ற படங்களை உங்கள் பன் டி.வி பார்த்தா நம் தமிழன் பார்த்தான்? இனிமேலும் குப்பைகளை அள்ளி இரைக்காதீர்! விட்டுவிடுங்கள் தமிழர்கள் பாவம்! உங்கள் புள்ளகுட்டிகளை ஃபாரினில் படிக்க வைப்பீர்கள் அதனால் தேவர் மகன் டயலாக் உங்களுக்கு உதவாது.
'ப்ளீஸ் எங்கள் புள்ளைக்குட்டிகளை நிம்மதியாக படிக்க விடுங்கள்!'
யக்கா... கலாக்கா! உங்ககிட்டே ஒரு கேள்வி. எனக்கென்னமோ 'மானாட மயிலாட'ல ஆடுற பசங்க மொத்த பேரின் ஆட்டம் ஒரேமாதிரிதான் இருக்கு. ஆனா உங்களுக்கு மட்டும் எப்படிக்கா கெமிஸ்ட்ரி தெரியுது?
நல்லா ஆடும் ஜோடியை அன்னிக்கு மூடு அப்செட் பண்ணுவதும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஜோடியை புகழ்ந்து தள்ளுவதும்தான் உங்கள் கெமிஸ்ட்ரியா? பாவம் அந்தப் பயலுவ.. ஏதோ நீங்க புகழ்ந்து தள்ளிட்டீங்கன்னா உலகநாயகன் பட்டம் கிடைச்ச மாதிரி நெக்குருகி அழுது வடியுறாங்க. மனசைத் தொட்டு சொல்லுங்க.. நீங்க இந்த கெமிஸ்டரி பாடத்தை எந்த காலேஜ்ல கத்துக்கிட்டீங்க? உங்களால அவங்க ஆடுறதுல கால்வாசி இப்போ ஆட முடியுமா? ஆடினா அந்த ஸ்டேஜ்தான் தாங்குமா? அப்படி ஆடிட்டா உங்க கெமிஸ்டரி ஹிஸ்டரில இடம் பிடிச்சுடும்! கொஞ்சம் யோசிங்கக்கா. பாவம் அந்த பசங்களை விட்டுருங்க. உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க..மானும் மயிலுமா மேடையில ஆடுது. உங்க கெமிஸ்டரி மார்க்குக்காக தினத்தந்தி அதிசய பாம்புகள் கணக்கா பின்னிப்பிணைஞ்சு பயபுள்ளைக ஆடுற ஆட்டத்துல மனசும்ல சேர்ந்து ஆடுது! இந்தக் கண்றாவி கெமிஸ்டரியை இத்தோட நிறுத்திக்கங்க. வேற எதாச்சும் புதுசா பண்ணுங்க.. இல்லைனா செவனேனு வீட்டுல உட்காருங்க. கோடிப் புண்ணியமா போகும்! நீங்க அந்த நிகழ்ச்சிக்கு முழுக்குப் போட்டுட்டீங்கன்னா நிச்சயம் அதுல பாதி பேரு சினிமால அல்லது வேறெங்கிலும் செட்டில் ஆகிருவானுங்க. கொஞ்சம் காசும், மேடையும் மைக்கும் கிடைச்சா எதுவேணும்னாலும் பண்ணலாம்கிற நினைப்பை மொதல்ல விடுங்க. இல்லை எல்லாத்துக்கும் மேல நீங்க 'எம்.எம் சீஷன் 25' வரை ப்ளான் பண்ணி இருந்தீங்கன்னா..மானாட மயிலாடவின் நிரந்தர ஜட்ஜ்ஜா இருக்க முடிவு பண்ணி இருந்தீங்கன்னா பரவாயில்லை இருந்து தொலைங்க..!.. தயவு செஞ்சு நீங்க கெட்அப் மாத்திலாம் வந்து பயமுறுத்தாதீங்க. உங்க போலீஸ் கெட்அப் பார்த்து என் நண்பன் ஒருவன் வேப்பிலை அடிக்குற அளவுக்கு போயிட்டான். அக்கா! கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்குறேன். உங்களை நினைச்சா கவுண்டமணியின் டயலாக்தான் ஞாபகத்து வருது..
"நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இதுலாம்தேவைதானா?"
2 கருத்துகள்:
business nu vanthutta athu appadithan
அடி சக்கை !
கருத்துரையிடுக